விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அருள்நிதி. 'வம்சம்' படத்தை தொடர்ந்து 'மௌனகுரு', ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' தகராறு என சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து அருன்நிதி நடிப்பில் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'டிமான்டி காலனி' ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன!
இந்நிலையில், அருள்நிதிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அருள்நிதி மணக்கப் போகிறவரின் பெயர் கீர்த்தனா. இவர் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகள். சென்னை தி.நகரில் உள்ள, ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. கருணாநிதி தலைமையில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்!